உள்ளூர் செய்திகள்

‌காமாட்சியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி நடந்தது.

தை முதல் வெள்ளி; கூறைநாடு காமாட்சியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி

Published On 2023-01-21 09:00 GMT   |   Update On 2023-01-21 09:00 GMT
  • அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்.
  • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை கூறைநாடு காமாட்சியம்மன் கோயிலில் தை முதல் வெள்ளியை முன்னிட்டு பூச்சொரிதல் எனப்படும் புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது.

விஸ்கர்ம சமுதாய மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று புஷ்பாஞ்சலி விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதைப்போல் நேற்று விழாவையொட்டி, அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், இளநீர் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்யப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் எடுத்துவந்த மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்று. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தக்கர் கோவிந்தராஜன், சாமிநாதன், தலைவர் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், ரமேஷ், குருக்கள் இசைசுந்தர் உள்ளிட்ட விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News