உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு வீரர்கள்.

நத்தம் அருகே தீ தடுப்பு விழிப்புணர்வு

Published On 2023-09-30 12:46 IST   |   Update On 2023-09-30 12:46:00 IST
  • தொழிலாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
  • தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.

நத்தம்:

நத்தம் அருகே உலுப்பகுடியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு சார்பாக அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் 10 பேர் கொண்ட தீயணைப்பு குழு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். முகாமில் மழை, வெள்ளம் காலங்களில் பேரிடர் மீட்பு பணிகள் மூலம் எப்படி மீட்பது, கேஸ் சிலிண்டர் தீ விபத்தை எப்படி கட்டுப்படுத்துவது,

கட்டிடங்களின் மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீட்பது என்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.

Tags:    

Similar News