உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தீ விபத்தில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2023-02-10 12:31 IST   |   Update On 2023-02-10 12:31:00 IST
  • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
  • ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான தெர்மாகோல் வைக்கும் குடோன் உள்ளது. இங்கு தெர்மாகோல் மொத்தமாக வாங்கி சேமித்து தொழிற்சாலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த குடோனில் இருந்து கரும்புகை கிளம்பியது. அக்கம்பக்கத்தினர் வந்து குடோனை பார்த்தபோது தீ பிடித்து மளமளவென எரிய துவங்கி குடோன் முழுவதும் பரவியது. தகவல்பேரில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டு கோட்டை, ஒரகடம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News