உள்ளூர் செய்திகள்
மாணவியின் தாயிடம் நிதிஉதவி வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டியில் சுவர் விழுந்து காயமடைந்த மாணவிக்கு நிதி உதவி
- மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
- மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே முத்துசங்கிலிபட்டியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விளம்பர சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ரூபிகா 2 கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. அவரது தாயார் மருத்துவ உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
மாணவியின் மருத்துவ உதவிக்கு மாவட்ட கலெக்டர் பொறுப்பு நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாணவியின் தாயிடம் ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் மொட்டனூத்து ஊராட்சி தலைவர் நிசாந்தி தனது சொந்த நிதியில் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினர்.
அப்போது ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. அய்யப்பன், ஊராட்சி செயலாளர் விஜயன், இந்துமுன்னணி மனோஜ்குமார், ஆச்சி, கார்த்திக், பகவதிராஜா ஆகியோர் உடனிருந்தனர்.