உள்ளூர் செய்திகள்

தண்ணீர் இறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

நிலக்கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்கும் விவசாயிகள்

Published On 2022-12-18 09:40 GMT   |   Update On 2022-12-18 09:40 GMT
  • சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது
  • இந்த ஆண்டு கடலை சாகுபடியில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம், பெரியகுத்தகை ,செம்போடை, தேத்தாகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் ஆண்டுதோறும் பயிரிடப்படும் நிலக் கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது .ஒரு சில இடங்களில் மழை காலத்திற்கு முன்பே விதைகடலை போடப்பட்டு அவைகள் முளைத்து பூ பூத்த நிலையில் விழுந்து இறங்குவதற்கு வசதியாக மண் அணைக்கும் பணியும் நடைபெற்றது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சீராக தொடர்ந்து பெய்யும் என்று நம்பி நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் திடீரென்று வழக்கத்தைவிட குறைவான அளவு மழை பெய்ததால் தற்போது கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைக்க வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளது.

கடலை சாகுபடி செய்து 20 முதல் 40 நாட்கள் ஆன நிலையில் குளம் குட்டையில் இருந்து தண்ணீர் வைக்க வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் கடலை சாகுபடிக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.

இதனால் கடலை சாகுபடிக்கு கூடுதல் செய்வு ஏற்படுகிறது எனவிவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

கடலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உர தட்டுபாடு, பூச்சி தாக்குல், தண்ணீர் பற்றா குறையால் என்ஜீன் வைத்து தண்ணீர் இறைப்பதால் ஏற்படும் கூடுதல் செலவு, ஆள் சம்பளம் கூடுதல் என பல்வேறு செலவுகள் அதிகரிப்பால் இந்த ஆண்டுகடலை சாகுபடி எதிர்பார்த்த லாபம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News