உள்ளூர் செய்திகள்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நிலக்கோட்டை: வேளாண்மை துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

Published On 2023-07-22 06:41 GMT   |   Update On 2023-07-22 06:41 GMT
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.
  • மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நிலக்கோட்டை.:

நிலக்கோட்டை அருகே முருகத்தூரான்பட்டி, சிலுக்குவார்பட்டி, கட்ட க்கூத்தன்பட்டி பள்ளபட்டி, கொடைரோடு, கொங்க பட்டி, ஆவாரம்பட்டி, கல்லடிபட்டி, குரும்பபட்டி, அக்கரகாரபட்டி, காமலாபுரம், அழகம்பட்டி, மைக்கேல் பாளையம் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரபரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மல்லிகை பூ செடியில் மர்ம பூச்சி தாக்கு தல் காரணமாக பூக்கள் அரும்பிலேயே கருகி உதிர்கிறது. இதனால் செடிகள் முற்றிலும் கருகி விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும், பராமரிப்பு முறைகளை மாற்றியும் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடந்த 6 மாதங்களாக வேளாண்மை துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால், மல்லிகை பூச்செடியை தாக்கி அழிக்கும் மர்ம பூச்சியை கட்டுப்படுத்த கோரி விவசாயிகள் நிலக்கோட்டை வேளா ண்மை துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அறிந்ததும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் உமா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வேளாண் ஆராய்ச்சி ஆய்வு மேற்கொண்டு மர்ம பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News