உள்ளூர் செய்திகள்

புலவநல்லூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டனர்.

புலவநல்லூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்ககோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

Published On 2023-02-02 09:31 GMT   |   Update On 2023-02-02 09:31 GMT
  • புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.
  • நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருவாரூர்:

மணக்கால் ஊராட்சி புலவநல்லூர் கிராமத்தில் கடந்த ஆண்டு முதல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த ஆண்டும் அந்த இடத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகளும் அந்த இடத்தில் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த கருத்து வேற்றுமைகள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த இடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் நிறுத்தப்பட்டுள்ளது.

உடனடியாக அந்த இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் நெல் மூட்டைகளுடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதத்திற்கு மணக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்துரு தலைமை வைத்தார்.

இந்த உண்ணாவிரதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம், மணியன், அதிமுகவை சேர்ந்த சந்துரு, வளரும் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய செல்வம் மற்றும் தியாகு, மகேஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News