உள்ளூர் செய்திகள்

அவரை சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்

Published On 2023-08-31 15:41 IST   |   Update On 2023-08-31 15:41:00 IST
  • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரைக் காய் கிலோ ரூ.70 வரை விற்பனையானது.
  • கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. இச்சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செல வாகிறது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, ஓசூர், வேப்பனப்பள்ளி, பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங் கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடு பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அவரைக் காய், முட்டைக்கோஸ், காலி பிளவர், பீன்ஸ், முள்ளங்கி, புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட காய் கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில், அவரை சாகுபடி யில் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடையாகும் அவரைக்காய் ராயக்கோட்டை சந்தை மற்றும் ஓசூர், கிருஷ்ணகிரி உழவர் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர்.

ராயக்கோட்டை சந்தை யிலிருந்து ஏலம் முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்துதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதன் மூலம் ஆண்டு முழுவதும் நிலையான வருவாய் கிடைப்பதால் சிறு விவசாயிகள் அவரை சாகு படியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில் அவரை செடி மற்றும் கொடி வகையாக பயிரிடப் படுகின்றன. பட்டை, கொட்டை, சட்டை, சிவப்பு, நெட்டை, மூக்குத்தி, கோழி அவரை என பல்வேறு ரகங் கள் உள்ளன. இதில், கொடி வகை அவரை சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபடு கின்றனர். கொடி அவரை சாகுபடிக்கு பந்தல் தேவை. இச்சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செல வாகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரைக் காய் கிலோ ரூ.70 வரை விற்பனையானது.

தற்போது, உழவர் சந்தைகளில் கிலோ ரூ.46-க்கும், வெளி சந்தைகளில் கிலோ ரூ.50-க்கும் விற் பனை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் விலை மேலும் உயரும். மகசூல் அதிகரித்தாலும் ஓரளவுக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது. இதனால், அவரை சாகுபடியில் சிறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினர்.

Tags:    

Similar News