உள்ளூர் செய்திகள்

கடமலைக்குண்டு அருகே அவரை செடியில் பூக்கள் அதிக அளவு பூத்திருப்பதை படத்தில் காணலாம்.

கடமலைக்குண்டு அருகே அவரை விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-07-27 06:06 GMT   |   Update On 2022-07-27 06:06 GMT
  • வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.
  • தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலை- மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு, மூலக்கடை, முத்தால ம்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏரா ளமான ஏக்கர் பரப்பளவில் அவரை சாகுபடி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் கடந்த மாதம் கடமலை மயிலை ஒன்றிய கிரா மங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. அதன் எதிரொலியாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இந்த சீசனில் அவரை உற்பத்தி அதிகரி க்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதற்கிடையே கடந்த சீசனில் அவரை விலை அதிக அளவில் இருந்தும் மஞ்சள் நோய் தாக்கம் காரணமாக உற்பத்தி மிக குறைவாகவே காண ப்பட்டது. இதனால் விவ சாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைக்க வில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது உற்பத்தி அதிகரித்து காணப்படுவ தால் விலையும் அதே அளவில் நீடித்தால் விவ சாயிகளுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கும்.

இது தொடர்பாக விவ சாயிகள் கூறுகையில், பொதுவாக ஆடி மாதங்களில் வெயில் தாக்கம் காரணமாக வறட்சி நிலவும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சாரல் மழை காரணமாக தற்போது அவரை கொடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.

இதே போல விலையும் அதிகரித்தால் இந்த ஆண்டு அவரை விவசாயிகளுக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News