உள்ளூர் செய்திகள்

அரூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்:அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை என புகார்

Published On 2023-01-17 13:36 IST   |   Update On 2023-01-17 13:36:00 IST
  • குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
  • நலத்திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதில்லை.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூரில் மாதந்தோறும் வாரத்தின் முதல் வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அரூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மொரப்பூர் கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கையில் குறித்து மனுக்கள் கொடுக்கப்படும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று ஆக்ரோஷமாக கேள்விகளை முன்வைத்தனர்.

அரூர் உட்கோட்ட பகுதிகளில் உள்ள அரசு அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற் கொள்வதில்லை அதனால் விவசாயிகள் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும்

தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வந்தாலும் நலத்திட்டங்கள் குறித்தும் மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரிவிப்பதில்லை.

அனைத்து துறை அலுவலர்களும் மெத்தனப் போக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டை எழுப்பினார்கள்

குறிப்பாக வேளாண்மை துறையில் வழங்கப்படும் சொட்டுநீர் பாசனம் குறித்த பொருட்கள் தரமானதாக இல்லை என்றும் தக்காளி கூல் தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்று பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை குறித்து எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை என்றும் மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்பதில் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் அந்த திட்டத்தில் பயன் இல்லாமல் போவதாகவும்

வேளாண்மை துறையின் மூலம் மானிய விலையில் கொடுக்கப்படும் வேளாண் இயந்திரக் கருவிகள் மற்றும் மின் மோட்டார்கள் குறித்து மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து அரசு அலுவலர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது

பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News