உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

பேகார அள்ளி கிராமத்தில் உழவர் திருவிழா

Published On 2023-07-07 15:09 IST   |   Update On 2023-07-07 15:09:00 IST
  • காரிமங்கலம் உதவி வேளாண்மை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
  • அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் சுற்றுலா சென்ற விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகார அள்ளி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் சார்பில் உழவர் திருவிழா நடந்தது.

காரிமங்கலம் உதவி வேளாண்மை இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

பஞ்சாயத்து தலைவர் நந்தினி ஈஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குனர் அருள் வடிவு வேளாண் துறை சார்ந்த கண்காட்சியை தொடங்கி வைத்து வேளாண் திட்டங்கள் குறித்து பேசினார்.

குண்டலபட்டி கால்நடை ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணதாசன் மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் மழைக்காலங்களில் கால்நடை பராமரிப்பு குறித்து பேசினார்.

விதை சான்றளிப்பு அலுவலர் ஜெயமாலா, மீன் வளர்ச்சி துறை, வனத்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர்.

அட்மா திட்டத்தின் மூலம் வேளாண் சுற்றுலா சென்ற விவசாயிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து விவசா யிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் துறை அலு வலர்கள் பதில் அளித்தனர்.

நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News