திண்டுக்கல் அருகே குளம் நிரம்பியதால் விவசாயிகள் கொண்டாட்டம்
- சுமார் 19 ஆண்டுகள் குளம் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.
- குளம் நிரம்பும்போது ஒவ்வொரு வருடமும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள அடியனூத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் அச்சராஜ குளம் உள்ளது. இந்த குளம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த கன மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.
குளம் நிரம்பும்போது ஒவ்ெவாரு வருடமும் ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாரம்பரிய முறைப்படி கிடா வெட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். சுமார் 19 ஆண்டுகள் குளம் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்து வருகிறது.
இதனை முன்னிட்டு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அங்குள்ள விநாயகர் கோவிலில்சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று வாண வேடிக்கையுடன் குளக்க ரையில் அமைந்துள்ள முனியப்பன் மற்றும் கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் குளம் நிரம்பி மறுகால் செல்லும் இடத்தில் மலர் தூவி வழிபட்டனர். பின்னர் அங்கு கிடா வெட்டி விருந்து தயாரிக்கப்பட்டது. அந்த உணவு ஊர் மக்கள் அனை வருக்கும் அன்னதானமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊர் முக்கிய நிர்வாகிகள், பூசாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.