உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2022-12-24 15:52 IST   |   Update On 2022-12-24 15:52:00 IST
  • மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
  • பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பெருமளவில் முதலீடு செய்து ஓராண்டாக வளர்த்தும் உரிய விலை கிடைக்காது என்ற ஆதங்கத்தில் பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags:    

Similar News