கரும்பு வெட்ட தொழிலாளிகள் கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்
- கரும்பு வெட்டுவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை கூலி கொடுக்கிறோம். ஆனாலும் வெட்டுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
- விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அறுவடை எந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,120 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இதனால் விவசாயிகள் எதிர்பார்க்காத அளவுக்கு கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு 2 ஆயிரத்து 577 ஏக்கர் கரும்புகள் அறு வடைக்கு தயார் நிலையில் உள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது பாலக்கோட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை , கோபாலபுரத்தில் உள்ள சுப்ரமணிய சிவா சர்க்கரை ஆலை இரண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் வேறு ஒரு சிக்கலில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
வயலில் விளைந்துள்ள கரும்புகளை வெட்டுவதற்கு கூலி ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது கரும்பு வெட்டுவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை கூலி கொடுக்கிறோம்.
ஆனாலும் வெட்டுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பலரும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட அறுவடை பணிகளில் உள்ளனர்.
சர்க்கரை ஆலைகள் செயல்பட தொடங்கி விட்ட நிலையில் உரிய காலத்தில் வெட்டப்படாததால் கரும்புகளில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டன.
இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்ட வேளாண்து றையினர் கூறுகையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அறுவடை எந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நாளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் அறுவடை செய்யலாம்.
இவற்றை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இந்த எந்தி ரங்களை பயன்படுத்திய விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக கூடுதலாக கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு தெரிவித்தனர்.எந்திரங்களை உபயோகப்ப டுத்துவதன் மூலம்வெட்டு கூலி குறைவது ஒருபுறமிருக்க குறித்த காலத்தில் கரும்புகளை வெட்டி அரவை ஆலைகளுக்கு அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.