உள்ளூர் செய்திகள்

இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

Published On 2022-09-10 09:47 GMT   |   Update On 2022-09-10 09:47 GMT
  • கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.
  • ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

தஞ்சாவூர்:

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிடெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகு படிக்காக மேட்டூர்அணை முன் கூட்டியே திறக்கப்பட்டது.

இதனால்கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலக்கை தாண்டி சாகுபடிநடந்து ள்ளது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை அருகே ராமநாதபுரம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பல பகுதிகளில் 5 வாரங்கள் கடந்த நாற்றுக்கள் செழுமை யாக வளர்ந்து நிற்கிறது.

வளர்ந்துள்ள குறுவை பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயி சதீஷ் என்பவர் தனது சாகுபடி வயலில் ஆடுதுறை 36 வகை நெல்லை பயிரிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை மேற்கொள்ளும் இவர் ரசாயன உரத்திற்கு பதிலாக ரெட்டிப்பாளையத்தில் ஆட்டு கிடை போட்டுள்ள வர்களிடம் இருந்து ஆட்டுப்புழுக்கை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.

இதற்காக பேய்வாரி தரைப்பாலத்தில் ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில், பல ஆண்டு களாக இயற்கை வழி சாகுபடியை செய்து வருகிறேன்.

ரசாயன உரங்கள் தெளிக்காமல் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்களிடம் மொத்தமாக ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

நாற்று நட்டதில் இருந்து இரண்டாவது முறையாக தற்போது இயற்கை உரம் தெளிக்கிறேன் என்றார். இவரை போல் ஏராளமான விவசாயிகளும் இயற்கை உரங்கள் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News