உள்ளூர் செய்திகள்
காளைமாடு உடலில் அம்மை நோய் தாக்கப்பட்ட காட்சி.
கால்நடைகளுக்கு பரவும் அம்மை நோயால் விவசாயிகள் அச்சம்
- கால்நடை வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம்
- பல நோய்களுக்கு ஆட்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படும்
குமாரபாளையம்:
கால்நடை வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வருமானத்தில் அவைகளை மேய்த்து வளர்த்து வரும் நிலையில், பல நோய்களுக்கு ஆட்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படும் போது, விவசாயிகளும் நஷ்டமடைய நேரிடுகிறது. தற்போது வீ மேட்டூர், மேட்டுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது.
மோளக்கவுண்டம் பாளையம் பகுதியில் கவுதம், என்பவரது மாடுகள் இந்த அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போல் அந்த பகுதியில் இருந்து பல பகுதிகளுக்கு இந்த நோய் பரவி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்க, தடுப்பூசி முகாம் அமைத்து நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.