உள்ளூர் செய்திகள்

மூதாட்டியை தாக்கிய விவசாயி சிறையில் அடைப்பு

Published On 2023-09-01 15:37 IST   |   Update On 2023-09-01 15:37:00 IST
  • கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.
  • தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே தொட்டபாவளி கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 68). இவருக்கு 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 3 மாதத்திற்க்கு முன்பு இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று முனியம்மாளின் மூத்த மகன் விவசாயி சுப்ரமணி என்பவர் தாய் முனியம்மாள் நிலத்தில், இந்த நிலம் எனக்கு சொந்தமானது என கூறி தனது மாடுகளை கட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட மூதாட்டி முனியம்மாவை சுப்பிரமணி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதில் கண், காது, கழுத்து பகுதியில் பலத்த காயம் அடைந்தார்.

உடனே முனியம்மாளை உறவினர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மாரண்ட அள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News