உள்ளூர் செய்திகள்
வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
- பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- மனவிரக்கியடைந்த முனிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,அஞ்செட்டி அருகே உள்ள கோரிபா ளையம் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(வயது37). இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை,
இதனால் மனவிரக்கியடைந்த முனிகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அரவது மனைவி ரூபா கொடுத்த புகாரின் பேரில் அஞ்செட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.