விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவெண்காட்டில், விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு
- விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், ஜிப்சம் மற்றும் மணிலா பூஸ்டர் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
- எலி கட்டுப்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்கள் பற்றி கூறினர்.
சீர்காழி:
வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் பண்ணை பள்ளி பயிற்சி வகுப்புகள் நிலக்கடலை மற்றும் எள்ளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்னும் தலைப்பில் திருவெண்காடு கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் முன்னிலை வகித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார். முதல் விதை வரையிலான தொழில்நுட்பங்களை அளிக்க இருப்பதாக கூறினார்கள். முதல் நாள் பயிற்சி வகுப்பில் வேளாண்மை இணை இயக்குனர் நிலக்கடலை பற்றியும், வேளாண் திட்டங்களை பற்றியும் வேளாண் அடுக்கு பற்றியும் விரிவாக எடுத்து கூறினர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வேளாண் புல பேராசிரியர் பாபு தரமான விதைகளை எவ்வாறு தேர்வு செய்தல், நம் பகுதிக்கு ஏற்ற பட்டம் மற்றும் இடைவெளி, விதை நேர்த்தி செய்தல், உரமிடுதல், ஜிப்சம் மற்றும் மணிலா பூஸ்டர் பற்றி தெளிவாக பயிற்சி அளித்தார்.
எலி கட்டுப்பாட்டிற்கு தேவையான தொழில்நுட்பங்களை பற்றியும் கூறினார்கள். அதற்குப் பின் வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சௌந்தர்ராஜன் செய்திருந்தனர்.