உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

புரட்டாசி மாதம் எதிரொலி ஆண்டிபட்டி சந்தையில் ஆடுகள் விலை வீழ்ச்சி

Published On 2023-09-25 10:29 IST   |   Update On 2023-09-25 10:29:00 IST
  • கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
  • தற்போது புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு முத்தனம்பட்டி, ரெங்கநாதபுரம், அய்யர்தோட்டம், புள்ளிமான் கோம்பை, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக மலைப்பகுதியான ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இவை வாரச்சந்தையில் கொண்டு வரப்பட்டு வியாபாரிகள் மூலம் வாங்கிச் செல்லப்படுகிறது. கடந்த மாதம் வரை நல்ல விலைக்கு விற்பனையான ஆடுகள் தற்போது கடும் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதம் என்பதால் விலை மந்தமாக உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். கடந்த மாதம் விற்பனையான விலையில் பெரும்பகுதி தங்களுக்கு கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை மீண்டும் விவசாயிகள் எடுத்துச் சென்றனர். இன்னும் சில வாரங்களுக்கு இதேநிலைதான் தொடரும் என்பதால் வாரச்சந்தையில் விற்பனை சுமாராக இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

விற்பனை இல்லாததால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது.

Tags:    

Similar News