உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுதிறனாளிகளுக்கான மானியத் தொகை பெறுவதற்கான ஆணையை பயனாளிக்கு வழங்கினார்.

ெபாதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிக்கு கண் கண்ணாடிகலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்

Published On 2023-07-04 07:18 GMT   |   Update On 2023-07-04 07:18 GMT
  • குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
  • அரசு விதி முறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.

கூட்டத்தில் பட்டா தொடர்பான 103 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 58 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 62 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 20 மனுக்களும்,ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 77 மனுக்களும், இது தொடர்பாக தர மனுக்கள் 207 ஆக மொத்தம் 550 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியத் தொகை ரூ.25 ஆயிரம் வங்கி பரிவர்த்தனை மூலம் பெறுவதற்கான ஆணையை ஒரு பயனாளிக்கும், 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி ரூ.13600 மதிப்பீட்டிலும், மேலும் ரூ.4200 மதிப்பீட்டில் ஒரு பயனாளிக்கு கண்கண்ணாடி மற்றும் ஸ்மார்ட் ஸ்டிக் ஆகியவற்றை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஷ்வரன் அவர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News