கண் பரிசோதனை முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.
அம்பை நீதிமன்ற ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
- நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது
நெல்லை:
நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்ற ஊழியர்களுக்காக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை தாலுகா சட்டப்பணிகள் குழுத்தலைவர் மற்றும் சார்பு நீதிமன்ற நீதிபதி கே.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சி.செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.குமார், குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஏ.பல்கலை செல்வன், வழக்கறிஞர் சங்கங்களின் தலைவர்கள் எம்.ராஜேந்திரன், எஸ்.செல்வ ஆண்டனி, கே.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் டாக்டர் காயத்ரி கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினார். விழி ஒளி ஆய்வாளர் இந்திரா கண் பரிசோதனை மேற்கொண்டார். நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்கள் என 120 பேருக்கு கண் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை நடைபெற்றது. முகாமிற்கான ஏற்பாடுகளை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் முதன்மை முகாம் மாணிக்கம், உதவி மேலாளர் அகிலன் ஆகியோர் செய்திருந்தனர்.