கடையநல்லூரில் கண் சிகிச்சை முகாம்
- 200-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
- 40-க்கும் மேற்பட்டோரை கண் புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
கடையநல்லூர்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஏற்பாட்டில் தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாம் கடையநல்லூரில் நடைபெற்றது. டவுன் கிளை தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் அன்வர் சாதிக், துணைச் செயலாளர்கள் பிலால் ஜலாலுதீன், பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மாவட்டத் தலைவர் அப்துல் சலாம் தொடங்கி வைத்தார். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நவீன் மற்றும் அன்னரோஸ்லின் ஆகியோர் தலைமையிலான குழுவினர் 200-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்வ தற்காக அழைத்து சென்றனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டவுன் கிளை நிர்வாகிகள் செயலாளர் ஹாலித், பொருளாளர் முகமது கனி, துணைத்தலைவர் அப்துல் அஜீஸ் ஆகியோர் செய்தனர். முகாமில் கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதி யில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.