உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே உள்ள கீரணப் பள்ளியில் விற்பனைக்காக வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர்.
வெளிமாவட்டங்களுக்கு இளநீர் ஏற்றுமதி
- பொதுமக்கள் உடல் உஷ்ணத்தை போக்க அதிக அளவு இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
- சூளகிரி பகுதியில் தோட்டத்தில் விளையும் இளநீரை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரங்களில் அதிக அளவு வெயில் மற்றும் வெப்பம் அதிகரிப்பால் விளை நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக செடி கொடிகள், மரங்களில் உள்ள இலைகள் கருகி வருகிறது.
மேலும் பொதுமக்களுக்கு வரட்டு இருமல், தொண்டை வலி, சளி மற்றும் காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உடல் உஷ்ணத்தை போக்க அதிக அளவு இளநீர் வாங்கி பருகி வருகின்றனர்.
இதனால் சூளகிரி சுற்று வட்டார பகுதியில் தோட்டத்தில் விளையும் இளநீரை அறுவடை செய்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.