உள்ளூர் செய்திகள்

விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய காட்சி.

சத்தியமங்கலத்தில் 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை

Published On 2023-07-07 09:45 GMT   |   Update On 2023-07-07 09:45 GMT
  • ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
  • இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய அரசு சார்பில் பொதுமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டைகளை வழங்கினார்.

முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பண்ணாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்து இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பாரத பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பொதுமக்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சையை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பெறலாம். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளாக சிறந்த சேவை, மக்களுக்கு சேவை, ஏழை, எளிய மக்களின் நலன் என செயல்படுவதாகவும், அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றியவர் பிரதமர் மோடி.

ஏழை, எளிய மக்களுக்கும் உலக தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.இந்தியாவின் 100-வது சுதந்திர ஆண்டிற்குள் உலகிலுள்ள அனைத்து நாட்டிற்கும் வழிகாட்டும் நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி உழைத்து வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து வரும் நீலகிரி பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து பவானிசாகர் தொகுதி மண்டல தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

மேலும் புளியம்பட்டி நகராட்சி பகுதி சாயப்பட்டறைகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர கோரி மனு அளித்தனர். மலை கிராம பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி பவானிசாகர் மண்டல் சார்பாக ஈஸ்வரமூர்த்தி, தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர் சதீஷ்குமார், சந்திரசேகர், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், வர்த்தக பிரிவு மாவட்ட துணைத்தலைவர் நீரா பாலகிருஷ்ணன்,

விவசாய அணி மாவட்ட பொதுச்செ யலாளர் ரகு சூர்யா, இளை ஞரணி தலைவர் லட்சும ணன், செயலாளர் வேலு ச்சாமி, துணைத்தலைவர் தீபா சாகர், சமூக ஊடக மாவட்ட துணை த்தலைவர் தங்கவேல், ஒன்றிய துணைத்தலைவர் சின்ராஜ், வக்கீல் பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன்,

மாவட்ட பொதுச் செயலா ளர் சக்திவேல், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் கந்தவேல், ஆன்மீக பிரிவு தலைவர் மற்றும் புளி யம்பட்டி நகர சார்பில் நகரத்தலைவர் தங்கமணி உள்ளிட்ட அனைத்து பா.ஜ.க. தலைவர்கள், பொறு ப்பாளர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News