உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் காட்சி.
தரிசு நிலத்தில் தீ விபத்து: கரும்பு, வாழை தோட்டம் தப்பியது
- தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியது.
- தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அழகிரி காலனி அரியப்பம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் மற்றும் மயில்சாமி ஆகியோருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியதால் அருகில் கரும்பு காடும் மற்றும் வாழை பயிர்கள் சிறிது சேதமடைந்தன .
உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வில நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் கரும்பு, வாழைத்தோட்டம் தப்பியது.