உள்ளூர் செய்திகள்

நூலக வளாகத்தில் கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தல்

Published On 2023-07-03 06:38 GMT   |   Update On 2023-07-03 06:38 GMT
  • பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்
  • பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்

அந்தியூர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே சிவசக்தி நகர் பகுதியில் நூலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகத்துக்கு வெள்ளையம்பாளையம் புதுப்பாளையம் அண்ணா மடுவு, காட்டூர், கந்தம்பா ளையம், பள்ளிய பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமா னோர் வந்து புத்தகங்களையும், பொழுதுபோக்கு கதைகளையும் படித்து செல்கிறார்கள்.

இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என வாசகர்கள் ஏராளமானோர் தினமும் வந்து அங்கேயே அமர்ந்து படித்து செல்கிறார்கள். மேலும் பொதுமக்கள் பலர் தங்க ளுக்கு தேவையான புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து விட்டு கொண்டு வந்து வைப்பதும் பழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கேயே அமர்ந்து படித்து செல்லும் பெண்கள்மற்றும் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை படித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அங்கேயே மதிய உணவு எடுத்து வந்து படித்து விட்டு பின் வீட்டுக்கு செல்கின்றார்கள்.

அந்த நூலக வளாகத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் தேர்வுக்கு படிப்பவர்கள் மற்றும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நூலக அமைந்துள்ள பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பஸ் நிலை யத்திற்கு சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

எனவே இங்கு வரும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாசகர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News