உள்ளூர் செய்திகள்

ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்த உரங்களை வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு மேற்கொண்டார்.

யூரியா, டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது

Published On 2023-03-31 09:32 GMT   |   Update On 2023-03-31 09:32 GMT
  • உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை ஆய்வு செய்தனர்.
  • உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள், நிலக்கடலை, மக்காச் சோளம், எள், காய்கறிகள், வாழை, மரவள்ளி, தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ள காரணத்தால் பயிர் சாகுபடிக்கு உகந்த சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 301 மெட்ரிக் டன் யூரியா, 127 மெட்ரிக் டன் டி.ஏ.பி, 893 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் கொச்சியில் இருந்து 1,370 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்ததை வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டு ப்பாடு) வைத்தீஸ்வரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுபாடு) ஜெய சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது வேளா ண்மை இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக தற்போது யூரியா உரம் 4,027 மெ.டன்னும், டி.ஏ.பி உரம் 2,894 மெ.டன்னும், பொட்டாஷ் உரம் 3,133 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 11,086 மெ.டன்னும், சூப்பர் பாஸ்பேட் 856 மெ.டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு தட்டுப்பாடின்றி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளா ண்மை விரிவாக்க மையங்க ளில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவ தோடு, திண்டலில் உள்ள வேளா ண்மைத் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து அதில் பரிந்துரைக்கப்படு வதற்கு ஏற்ப உரங்களை பெற்று பயன்படுத்தி உர செலவை குறைத்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News