உள்ளூர் செய்திகள்

பரதநாட்டிய போட்டிகளில் முதலிடம்

Published On 2023-01-07 16:15 IST   |   Update On 2023-01-07 16:15:00 IST
  • பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்
  • மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர்

பவானி,

பவானி வர்ணபுரம் ஒன்றாவது வீதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு நடத்திய கலை திருவிழா போட்டியில் இப்பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் செவ்வியல் குழு, செவ்வியல் தனி நடனம், மனிதநேயப் பாடல், வில்லுப்பாட்டு, ஓவியம் இயற்கைக்காட்சி, களிமண்சுதை செய்தல், கதை சொல்லுதல், நாட்டுப்புறப்பாடல் என பல்வேறு போட்டிகளில் வட்டார அளவில் முதல் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் என பல்வேறு பரிசுகளை வென்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று செவ்வியல் (பரதநாட்டியம்) குழு நடன போட்டியில் முதலி டம் பெற்றது.

பின்னர் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான செவ்வியல் குழு பரதநாட்டியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த னர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News