உள்ளூர் செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசியப்பன்.

யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2023-05-07 09:06 GMT   |   Update On 2023-05-07 09:06 GMT
  • தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
  • ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (68). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அத்துடன் கால்நடை களையும் வளர்த்து வருகின்றார்.

இதில் 20 ஆடுகளை வளர்த்து வரும் தவசியப்பன் இவரது தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

அதேபோல் சம்பவத்தன்றும் விளாங்குட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாலை நேரத்தில் ஆடுகளை மேய்க்கச் அழைத்து சென்று ள்ளார். அவருடன் மற்ற நபர்களும் ஆடு மேய்ப்பதற்கு உடன் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

இதனையடுத்து யானை அவரை தாக்க வருவதற்குள் அவருடன் வந்தவர்கள் தகர டின்னில் சப்தம் ஒலி எழுப்பியதை கேட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

பின்னர் அவருடன் வந்த நபர்கள் அவரது மகன் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தவசியப்பன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

யானை தூக்கி வீசப்பட்டதில் விலா எலும்பு, கழுத்து பகுதியில் எலும்பு முறிவு மற்றும் சிராய்ப்பு காயங் களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News