உள்ளூர் செய்திகள்
மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
- பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி பர்கூரில் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணியின் முடிவில் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பார்த்தீபன், மாணவ- மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன் நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணியில் ஆசிரிய ஆசிரியைகள், பர்கூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.