உள்ளூர் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் குறித்த அறிவிப்பு ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பெற சிறப்பு முகாம்

Published On 2023-07-14 13:33 IST   |   Update On 2023-07-14 13:33:00 IST
  • பயனாளிகளான ரேஷன் கார்டுகாரர்கள் விண்ணப்பங்களை அளிக்க முகாம் நடத்தப்படும்.
  • விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கப்படும்.

ஈரோடு:

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனை யடுத்து இந்த திட்ட த்தில் சேர தகுதியான பயனா ளிகளை தேர்ந்தெ டுக்கும் பணி தொடங்கியு ள்ளது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்ட த்தில் பயனாளிகளான ரேஷன் கார்டுகாரர்கள் விண்ணப்பங்களை அளிக்க முகாம் நடத்தப்படும்.

கார்டுகளின் எண்ணிக்கை படி 3 கட்டமாக முகாம் நடக்க உள்ளது. முதற்கட்ட முகாம் வரும் 24-ந் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை நடை பெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 7,67,448 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷனில் விண்ண ப்பம் வழங்கினாலும் அவற்றை பூர்த்தி செய்து பெறுவதற்காக அந்தந்த பகுதி ரேஷன் கடை அருகே சமுதாயக் கூடம், பள்ளிகளில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 84 பேரிடம் மனு பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பத்துடன் டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன் படி அதற்கான நாளில் முகாமுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்து ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை தெரிவித்து விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News