உள்ளூர் செய்திகள்

வீதிகளில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்

Published On 2022-11-18 15:02 IST   |   Update On 2022-11-18 15:02:00 IST
  • மழை நீர் குளம் போல் தேங்கி சாலைகளில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
  • இந்த பகுதியில் உள்ள ஒரு சில குடும்பங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்ட அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்தியூர், நவ. 18-

அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள நேரு வீதி, அம்மன் நகர், அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது அந்த பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு சில இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி சாலைகளில் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்தால் தற்போது தேங்கியுள்ள நீர் விரைவில் வடிவதற்கு உண்டான வழிவகை உள்ளதாகவும், இந்த தேங்கியுள்ள நீரால் விஷ பூச்சிகள், கொசு ஆகியவை அதிக அளவில் இந்த குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை மிக அதிகமாக இருப்பதால் இந்த பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள ஒரு சில குடும்பங்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்ட அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து புதிய இந்தியா, புதிய மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சுரேஷ் கூறுகையில், இந்த பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்த பகுதி மக்கள் விசபூச்சிகள், கொசுத்தொல்லையினால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக கலெக்டரிடம் மனுக்கள் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் நலன் காக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News