உள்ளூர் செய்திகள்

பெரும்பள்ளம், வரட்டுபள்ளம், குண்டேரிபள்ளம் அணைகள் நிரம்பி வழிகிறது

Published On 2022-11-30 09:35 GMT   |   Update On 2022-11-30 09:35 GMT
  • அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
  • இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், அணைப்பகுதிகளான குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இந்நிலையில் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

இதேப்போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவில் உள்ளது. இதேபோல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டமும் தனது முழு கொள்ளளவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

தற்போது இந்த அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News