உள்ளூர் செய்திகள்

தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

Published On 2023-12-03 07:06 GMT   |   Update On 2023-12-03 07:06 GMT
  • கொடிவேரி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 24,504 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை பிறப்ப்பித்தது.

அதை தொடர்ந்து இன்று காலை கொடிவேரி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சதீஷ்குமார் மதகை திருகி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது தண்ணீர் சீறிப்பாய்ந்து வாய்க்கால்களில் சென்றது.

இந்த தண்ணீரானது இன்று முதல் 31.4.2024 வரை 120 நாட்களுக்கு 7,776 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News