உள்ளூர் செய்திகள்

இளம்பெண் குழந்தையுடன் மாயம்

Update: 2022-09-27 07:51 GMT
  • சம்பவத்தன்று மாலை வழக்கம் போல கண்ணன் வீட்டுக்கு வந்த போது கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
  • இரவு அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கீதாவையும், குழந்தையையும் காணவில்லை.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சிறுவலூர், ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (35). வேன் டிரைவர். இவரது மனைவி கீதா (25). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கீதா எந்த நேரமும் செல்போனில் பேசிக் கொண்டு குழந்தையையும், வீட்டு வேலைகளையும் கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வழக்கம் போல கண்ணன் வீட்டுக்கு வந்த போது கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், கீதாவிடமிருந்து செல்போனை வாங்கி கொண்டு வெளியில் சென்று விட்டார். மீண்டும் இரவு அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி கீதாவையும், குழந்தையையும் காணவில்லை.

எங்கு தேடியும் அவர்கள் கிடைக்க வில்லை. இதையடுத்து கண்ணன் சிறுவலூர் போலீஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News