உள்ளூர் செய்திகள்

எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா

Published On 2023-02-18 13:47 IST   |   Update On 2023-02-18 13:47:00 IST
  • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
  • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகிரி:

சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News