உள்ளூர் செய்திகள்

அதிகமாக மது குடித்த வட மாநில தொழிலாளி சாவு

Published On 2023-10-30 15:59 IST   |   Update On 2023-10-30 15:59:00 IST
  • அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்
  • சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் இறந்து கிடப்பது தெரிய வந்தது

ஈரோடு,

மகாராஷ்டிர மாநிலம், தனோரா, வார்டு எண் -3 ஐ சேர்ந்தவர் அமர் (28). இவரது தம்பி சாகர் தத்து பவன் (25). இருவரும் கடந்த ஒரு வருடமாக, ஈரோடு அடுத்துள்ள சோளங்கா பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தனியார் தொழிற் சாலையில் வெல்டராக வேலை பார்த்து வந்தனர்.

மதுவுக்கு அடிமையான அமர் கடந்த 2 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றிக் கொண்டிருந்து ள்ளார்.

தம்பி சாகர் தத்து பவன், அண்ணன் அமருக்கு அறிவுரைகள் கூறி வந்துள்ளார். இதனால், அமர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றாதா கவும் தெரிகிறது.இந்த நிலை யில், கடந்த 2 நாள்களாக அமர் அதிக அளவில் மது குடித்துவிட்டு சோளங்கா பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் போதையில் தள்ளாடியவாறு மீண்டும் அமர் மதுக்கடைக்கு செ ன்றதை சாகர் தத்து பவன் பார்த்துள்ளார்.

ஆனால், நேற்று காலை 10 மணி வரையில் அமர், அவரது குடியிருப்புக்கு வரவில்லை. இதையடுத்து, சாகர் தத்து பவன், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மேற்பா ர்வையாளருடன் அமீரை தேடிச் சென்று ள்ளார்.

அப்போது, சோளங்கா பாளையம் மதுக்கடைக்கு செல்லும் வழியில் உள்ள இட்டேரி வண்டிப்பாதையில் அமீர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அருகில் சென்று பார்த்தபோது, அமீர் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, சாகர் தத்து பவன் அளித்த புகாரின் பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

Tags:    

Similar News