உள்ளூர் செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையத்தில் 13 வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2023-07-14 07:50 GMT   |   Update On 2023-07-14 07:50 GMT
  • ஒருவர் வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
  • ஜே.சி.பி. எந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் சுமார் 30ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். அதைத்தொ டர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகி ன்றனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் உள்ள நிலம் தனக்கு சொந்தமானது எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பொது மக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில், தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு தனியார் சார்பில் பேனர் வைக்க ப்பட்டது.

கடந்த மாதம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அதற்காக மின் இணை ப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த 13 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News