தென்னை நார் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்னை நார் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
- கழிவுகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி அத்தாணி பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
- இதையடுத்து பொதுமக்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி செம்புளிசாம் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு நார் மில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவுகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அத்தாணி பகுதியில் சென்று கொண்டு இருந்தது.
இந்த நிறுவத்தில் இருந்து உற்பத்தியாகும் தென்னை நார் கழிவுகளை சாலை ஓரங்களிலும், பட்டா நிலங்களிலும், ஓடைக ளிலும் கொட்ட ப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர்.
தென்னை நார் கழிவுகளை சாலையின் ஓரங்களிலும், நிலங்க ளிலும், ஓடைகளிலும் கொட்டு வதால் நிலத்தடி நீர் மாசுபடுகின்றது.
மேலும் குடிநீர் ஆதாரங்கள் மாசடை கின்றன. நாற்கழிவுகளின் துகள்கள் காற்றில் பறந்து காற்று மாசுபடுகின்றன என்று கூறி பாரப் புளிமேடு, செம்புளிசாம் பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் தென்னை நார் கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை சிறை பிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் பானு ரேகா, நில வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, அத்தாணி பேரூராட்சி அலுவலர் பூபதி ராஜா, ஆகியோர் பொது மக்களி டத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இனி இதுபோல் கழிவுகளை ஏற்றி வந்து கொட்டினால் அந்த நிறுவ னத்தின் மீதும் வாகனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைய டுத்து பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.