உள்ளூர் செய்திகள்

அந்தியூர் பெரிய ஏரியில், படகு இல்லம் அமைப்பு

Published On 2023-04-24 12:21 IST   |   Update On 2023-04-24 12:21:00 IST
  • அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் விடப்படும் படகு இல்லம்,பிற வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது
  • படகு இல்லம் அந்தியூர் பகுதிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வெள்ளித்திருப்பூர் சாலையில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் வரட்டு பள்ளம் அணை நிரம்பி, கெட்டி சமுத்திரம் ஏரி அடுத்து பெரிய ஏரி வழியாக சந்திப்பாளையம் ஏரி வேம்புத்தி ஏரி ,ஆப்பக்கூடல் ஏரிக்கு தண்ணீர் செல்லும் .இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

மேலும் இந்த ஏரிகளில் மீன்கள் வளர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு குழந்தைகளை விடுமுறை நாட்களில் வெளியில் அழைத்துச் சென்று பொழுதுபோக்காக கண்டுகளிக்க இடம் இன்றி தவித்து வந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வனத்துறையி னாலும், பொதுப் பணி துறையாலும் முன் பகுதியில் கேட்டுகள் அமைத்து உள்ளே பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகளை விதித்து முன் பகுதி கேட்டு பூட்டப்பட்டு உள்ளது.

இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அரசு விடுமுறை நாட்களிலும் குடும்பத்துடன் சென்று பொழுதை கழிக்க இடம் இன்றி தவித்து வந்த மக்களுக்கு அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் விடப்படும் படகு இல்லம்,பிற வசதிகளுடன் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது .இதனை மிகுந்த வரவேற்பினை பொதுமக்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இதுப்பற்றி அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் இதுவரை விடுமுறை நாட்களில் குழந்தைக ளுடன் பொழுதை கழிப்பதற்கு கொடிவேரி அணை, பவானிசாகர் அணை ,வெள்ளோடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்ட இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விடுமுறையை கழித்து வந்தோம். இந்த நிலையில் இந்தப் படகு இல்லம் அந்தியூர் பகுதிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அந்தியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாகவும் ஐந்து ஏரிகள் இருந்தும் அந்தியூர் பகுதியில் படகு இல்லம் இல்லை என்று நினைத்திருந்த எங்களுக்கு கனவை நினைவாக்கி கொடுத்துள்ளார்கள். அதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் , அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜ லத்திற்கும் நன்றி தெரிவிக்கின்றோம். மேலும் இந்த படகு இல்லம் விரைவில் தொடங்கி பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News