உள்ளூர் செய்திகள்

சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

Published On 2023-06-01 07:23 GMT   |   Update On 2023-06-01 07:23 GMT
  • 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார்.
  • ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

கோபி:

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (57). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 3.8.2017 அன்று கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சுண்டப்பூரை சேர்ந்த சிவா (32) என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோன்று கோபிசெ ட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (75). இவர் கடந்த 24.2.2017 அன்று உப்புக்கார பள்ளம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த வாணிப்புத்தூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சதீஸ் என்கிற கருப்புசாமி என்பவர் ஓட்டிச்சென்ற ஆம்னி வேன் ஈஸ்வரமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈஸ்வரமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நேரு நகரை சேர்ந்தவர் சங்கர் (31). கூலித்தொழிலாளியான சங்கர் கடந்த 29.3.2019 அன்று வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சங்கரிடம் இருந்த செல்போ னை பறித்துக்கொண்டு தப்பியோடினர். அதைத்தொடர்ந்து சங்கர் அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாபுதூர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நெப்போ லியன் தற்போது சேலம் மாநகரம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த வழக்குகள் கோபியில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். 1-ல் நடைபெற்று வந்தது.

இந்த 3 வழக்குகளிலும் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் இன்ஸ்பெக்டர் நெப்போலி யனுக்கு ஜே.எம்.1 மாஜிஸ்தி ரேட் விஜய் அழகிரி சாட்சி விசாரணைக்கு ஆஜராக கூறி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 3 வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகாத இன்ஸ்பெக்ட ருக்கு வாரண்ட் பிறப்பி க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News