உள்ளூர் செய்திகள்

ஆட்டு வியாபாரியிடம் கத்தியை காட்டி ரூ.10 ஆயிரம் அபேஸ்

Published On 2022-10-09 09:37 GMT   |   Update On 2022-10-09 09:37 GMT
  • காங்கேயம் பகுதியில் சுப்பிரமணியம் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
  • அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

சென்னிமலை:

சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது தோப்புப்பாளையம். இப்பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியம் (57 ). இவர் ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று காங்கேயம் பகுதியில் ஆட்டு வியாபாரத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது தோப்பு ப்பாளையம் அருகில் உள்ள மலைக்கணுவாய் பகுதியில் ரோட்டில் தனியே வந்த பொழுது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சுப்பிரமணியமிடம் விஜயமங்கலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளனர்.

அவர்களுக்கு சுப்பிரமணியம் வழி சொன்ன பிறகு மொபட்டில் சென்றவரை அந்த நபர்கள் இருவரும் தடுத்து ஒருவர் செல்போனை பறித்து கொண்டார்.

மற்றொரு நபர் கத்தியை காட்டி இவரை மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றார்.கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் இரு வரும் பைக்கில் வேகமாக சென்று விட்டனர்.

இதனையடுத்து இந்த வழிப்பறி சம்பவம் குறித்து சுப்பிரமணியம் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்து, வழிப்பறி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News