இரும்பு பைப் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
- வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
பவானி,
ஓசூர் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து கேரளா நோக்கி செல்லும் வகையில் 10 சக்கரங்கள் கொண்ட டாரஸ் லாரி இரும்பு பைப் ஏற்றிய லோடு உடன் வந்து கொண்டு இருந்தது.
இந்த லாரியை மதுரை மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் வெடிமுத்து டிரைவர் ஆக ஒட்டி வந்துள்ளார். உடன் கிளீனர் பெருமாள் என இருவர் வந்துள்ளனர்.
பவானி ஈரோடு செல்லும் மெயின் ரோட்டில் நேற்று மாலை கூடுதுறை கோவிலுக்கு செல்லும் வளைவில் லாரி திரும்பும்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
லாரி கவிழ்ந்த பகுதியில் பல பொருள் அங்காடி ஒன்று இருந்த நிலையில் அந்த கடையின் முன் இருந்த பைக் சேதம் அடைந்துள்ளது. அதேபோல் அதிர்ஷ்டவசமாக லாரியில் வந்த டிரைவர் மற்றும் கிளீனர் பல பொருள் அங்காடியில் இருந்த நபர்கள் என யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
லேசான காயம் அடைந்த டிரைவர் மற்றும் கிளீனர் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் இரு கிரைன் வரவழைத்து 2 மணி நேரம் போராடி கவிழ்ந்து கிடந்த டாராஸ் லாரியை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.