உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் மாயமான 407 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-09-21 15:06 IST   |   Update On 2022-09-21 15:06:00 IST
  • நடப்பாண்டில் செல்போன் மாயமானதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நடவடி க்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
  • 407 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இங்கு செல்போன்கள் மாயம், திருட்டு, ஆன்லைன் பண மோசடி, வங்கி வாடிக்கையாளரிடம் பண மோசடி, சமூக வலைத்த ளங்கள் மூலமாக ஏற்படும் பிரச்சனைகள் மீது புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் செல்போன் மாயமானதாக பெறப்பட்ட புகாரின் பேரில் நடவடி க்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மாயமான ரூ.60 லட்சத்து 25 ஆயிரத்து 466 மதிப்பிலான 407 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News