உள்ளூர் செய்திகள்

5 டன் இரும்பு பொருட்களை திருடிய 3 பேர் கைது

Published On 2023-11-28 09:26 GMT   |   Update On 2023-11-28 09:26 GMT
  • இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு பெருந்துறை சாலையில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுமான நிறுவ னத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தியது போக டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள், உடைந்த இரும்புகள், இரும்பு பெயிண்ட் ட்ரம்கள் குடோனில் வைத்து அதனை பழைய இரும்பு வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு அக்ரகாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா அங்கு பணியாற்றும் காவலாளி ராஜேஷ் என்பவர் மூலமாக கட்டுமான நிறுவனத்தில் இருந்து பழைய இரும்பு பொருட்களை ஏற்கனவே கொள்முதல் செய்து வந்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் டன் கணக்கில் பழைய இரும்பு பொருட்கள் இருப்பதை அறிந்து கொண்ட அலாவுதீன் பாஷா தனது நண்பர்கள் உதவியுடனும், இரவு நேரத்தில் காவலாளி ராஜேஷ் உதவியுடனும் உள்ளே புகுந்து 5 டன் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் சார்பில் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கட்டுமான நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 5 டன் இரும்பு பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி அலாவுதீன் பாஷா, அகமது பாஷா, சிராஜுதீன் ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கட்டுமான நிறுவனத்தில் பழைய இரும்பு பொருட்களை திருடி சென்ற சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News