உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற 3 பேர் கைது

Published On 2023-07-25 09:58 GMT   |   Update On 2023-07-25 09:58 GMT
  • வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
  • வெளி மாநில லாட்டரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு:

தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கனிராவுத்தர் குளம், சூளை உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பொதுமக்களை ஏமாற்றி வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சவுந்தர் (24), பெரிய அக்ரஹாரம், கதவணை மின் நிலையம் பகுதியை சேர்ந்த உதயசந்திரன் (63), சூளை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த பாலு (48) ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து எண்கள் எழுத்தப்பட்டிருந்த வெள்ளைத்தாள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News