உள்ளூர் செய்திகள்

2 ஆயிரம் பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது

Published On 2023-02-07 09:45 GMT   |   Update On 2023-02-07 09:45 GMT
  • ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2ஆயிரம் பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
  • இந்த பருத்தி மூட்டைகளின் ஏலம் இன்று நடந்தது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடை பெறும்.

அந்த வகையில் தற்போது அந்தியூர் தவிட்டுப்பாளை யம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்தி நகர், சங்கரா பாளை யம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம்பாளையம், கள்ளி மடை, குட்டை ஆகிய பகுதி விவசாயிகள் பயிரிட்ட பருத்தி மூட்டைகளை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கொண்டு வருவார்கள்.

அந்த பருத்தி மூட்டைகள் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்கு முறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்க ப்பட்டு அதன் ஏலம் செவ்வாய்கிழமை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

இந்த ஏலத்தில் புளியம் பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவினாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்படும்.

கடந்த சில மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு 2,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் இந்த வாரம் 2 ஆயிரம் மூட்டைகள் பருத்தி மட்டும் வரத்து வந்தது. இந்த பருத்தி மூட்டைகளின் ஏலம் இன்று நடந்தது.

Tags:    

Similar News