உள்ளூர் செய்திகள்

சரக்கு வேனில் 1212 மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

Published On 2023-03-19 09:51 GMT   |   Update On 2023-03-19 09:51 GMT
  • வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
  • வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

பு.புளியம்படடி:

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News