உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவ, மணாவிகளுக்கு கல்லூரி கனவு கையேட்டினை அமைச்சர்

ஆர்.காந்தி வழங்கினார். அருகில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்.பிரகாஷ், மதியழகன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகர மன்ற தலைவர் பரிதா நவாப் உள்பட பலர் உள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது- அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

Published On 2022-07-03 14:47 IST   |   Update On 2022-07-03 14:47:00 IST
  • அரசுப் பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்த ப்படுத்தப்பட்டுள்ளது.
  • அரசுப் பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும்.

கிருஷ்ணகிரி, ‌

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரி கனவு என்னும் புத்தகத்தை மாணவிகளுக்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

பன்னிரண்டாம் வகுப்பை முடித்தோம், கல்லூரியில் சேர்ந்தோம், பட்டம் வாங்கினோம், வேலையில் சேர்ந்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்பதோடு உங்கள் கடமை முடிந்துவிடுவது இல்லை.

எத்தகைய ஆற்றல் படைத்தவர்களாக நீங்கள் உயர்ந்தீர்கள், அத்தகைய ஆற்றலை வைத்து இந்தச் சமூகத்தை எப்படி மேம்படுத்த முயன்றீர்கள் என்பதுதான் முக்கியம்.

அரசுப் பள்ளிகளில் உட்கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத்த ப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் பல்வேறு துறையில் உயர் அதிகாரிகளாக கோலோச்சிக் கொண்டி ருக்கிறார்கள்.

ஆகவே அரசுப் பள்ளியில், தமிழ்வழியில் படித்தாலும், நிச்சயம் முன்னேற முடியும் என்பதை மனதில் கொண்டு வாழ்கையில் வெற்றி பெற வேண்டும்.

கல்லூரியையும், படிப்பையும், கவனமாகத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம், கல்லூரிக் காலத்தில், கவனத்தைச் சிதறவிடாமல் இருப்பதுதான் மிக முக்கியம்.

அந்த வகையில், நீங்கள் படிக்கும் ஒவ்வொரு நாளும், படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமல்ல, நீங்கள் கல்லூரியில் அடியெடுத்து வைப்பதற்குக் காரணமான, உங்கள் பெற்றோரின் கனவையும் உழைப்பையும், நீங்கள் புரிந்துகொண்டு வாழ்கையில் முன்னேற வேண்டும்.

முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழிநுட்ப கல்லூரி, அரசு தொழிற் பழகுநர் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரி, சுகாதார துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பாக மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டி அரங்குகளை அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணை தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, தலைமை ஆசிரியர் மகேந்திரன், தாசில்தார் நீலமேகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News